மத்திய பிரதேச மாநிலத்தில் சர்வதேச தப்லிக் ஜமாஅத் இஜ்த்திமா
போபால்,டிச.21:வருகிற டிசம்பர் 25-27 வரை மூன்று தினங்கள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வைத்து தப்லீக் ஜமாஅத்தின் சர்வதேச இஜ்திமா (ஆலமி தப்லீகி இஜ்திமா) நடைபெறவுள்ளது.
ம.பி தலைநகர் போபாலில் புறநகர் பகுதியில் அமைந்துள்ள காசிபுராவிலுள்ள கிராமம் ஒன்றில் வைத்து இம்மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் முஸ்லிம்கள் கலந்துக் கொள்கின்றனர்.
25 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்விஜ்திமா நடைபெறவிருக்கிறது. லட்சக்கணக்கான மக்களிடையே தப்லீக் ஜமாஅத்தைச் சார்ந்த இஸ்லாமிய அறிஞர்கள், இவ்வுலகில் நேர்மையான வாழ்க்கையை வாழத் தேவையான இஸ்லாமிய அறநெறிகளைப் பற்றியும், மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனத்தை அடைவதற்கான வழிமுறைக்களைக் குறித்தும் மார்க்க சொற்பொழிவாற்றுவார்கள்.
டிசம்பர் 27 ஆம் தேதி கூட்டுத் துஆவுடன் இஜ்திமா நிறைவுறுகிறது. இம்மாநாட்டில் மவ்லானா ஜுபைர், மவ்லானா ஸாஅத், மவ்லானா யூனுஸ், மவ்லானா அஹ்மத் லாட், மவ்லானா யூசுஃப், மற்றும் பேராசிரியர் நாதிர் அலி உள்ளிட்ட அறிஞர்கள் கருத்துரை வழங்குவர்.
கண் தெரியாத, காதுகேளாத மக்களுக்கு சிறப்பு ஏற்பாடு உரைகளை புரியவைக்க சிறப்பு ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. இவ்விஜ்திமாவின் போது நூற்றுக்கணக்கான முஸ்லிம் ஜோடிகளுக்கு நிக்காஹ் எனும் திருமண ஒப்பந்தம் நடைபெறும். இத்திருமணம் இஸ்லாம் வலியுறுத்தும் எளிமையான முறையில் நடத்தப்படும். இவ்விஜ்திமால் 25 நாடுகளைச் சார்ந்த முஸ்லிம்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாநாட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தப்லீக் ஜமாஅத் சேவைத் தொண்டர்கள் கவனிப்பார்கள். இருந்தபோதிலும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மத்தியபிரதேச மாநில பா.ஜ.க முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மாநாட்டிற்கான ஏற்பாடுகளைக் குறித்து விசாரித்தார். மேலும் மாநாட்டிற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்துக்கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தப்லீக் இஜ்திமா நடைபெறும் கிராமத்திற்கு செல்லும் 22கி.மீ சுற்றளவு சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோகத்திற்கும் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாஅத் இஜ்திமா யொட்டி ரெயில்வே நிர்வாகம் கூடுதலான பெட்டிகளை ரெயில்களில் இணைக்கிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக