இடுகைகள்

2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: நாட்டில் எந்த இடத்திலும் இனி பொது இடங்களில் புதிதாக வழிபாட்டுத் தலங்களை கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்வாராக்கள் மற்றும் அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும். சாலைகளில் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட சட்டவிரோதமாக கட்டுமானங்கள் அனைத்தையும் இடிக்குமாறு உள்ளாட்சி நிர்வாகத்துக்கு குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தல்வீர் பண்டாரி, நீதிபதி முகுந்தகாம் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தங்களது இடைக்கால உத்தரவில் இந்தத் தீர்ப்பை வெளியிட்டனர். பொது இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் கட்டுவது தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தால் இறுதிமுடிவு எடுக்கப்படும்வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் பொது இடங்களில் தற்போது இருக்கும் வழிபாட்டுத் தலங்கள் குறித்து மாநில அரசுகள், வழக்குகளின் தன்மைக்கேற்ப முடிவெட...

மத்திய பிரதேச மாநிலத்தில் சர்வதேச தப்லிக் ஜமாஅத் இஜ்த்திமா

போபால்,டிச.21:வருகிற டிசம்பர் 25-27 வரை மூன்று தினங்கள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வைத்து தப்லீக் ஜமாஅத்தின் சர்வதேச இஜ்திமா  (ஆலமி தப்லீகி இஜ்திமா) நடைபெறவுள்ளது. ம.பி தலைநகர் போபாலில் புறநகர் பகுதியில் அமைந்துள்ள காசிபுராவிலுள்ள கிராமம் ஒன்றில் வைத்து இம்மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் முஸ்லிம்கள் கலந்துக் கொள்கின்றனர். 25 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்விஜ்திமா  நடைபெறவிருக்கிறது. லட்சக்கணக்கான மக்களிடையே தப்லீக் ஜமாஅத்தைச் சார்ந்த இஸ்லாமிய அறிஞர்கள், இவ்வுலகில் நேர்மையான வாழ்க்கையை வாழத் தேவையான இஸ்லாமிய அறநெறிகளைப் பற்றியும், மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனத்தை அடைவதற்கான வழிமுறைக்களைக் குறித்தும் மார்க்க சொற்பொழிவாற்றுவார்கள். டிசம்பர் 27 ஆம் தேதி கூட்டுத் துஆவுடன் இஜ்திமா நிறைவுறுகிறது. இம்மாநாட்டில் மவ்லானா ஜுபைர், மவ்லானா ஸாஅத், மவ்லானா யூனுஸ், மவ்லானா அஹ்மத் லாட், மவ்லானா யூசுஃப், மற்றும் பேராசிரியர் நாதிர் அலி உள்ளிட்ட அறிஞர்கள் கருத்துரை வழங்குவர். கண் தெரி...

சந்தூக் பயணம்- இந்தப் பயண விவரம்,சிரிப்பதற்கு;அல்ல சிந்திப்பதற்கே!!

படம்

தொழுகை கால அட்டவணை விழுப்புரம், கடலூர், மற்றும் புதுவை.

படம்
                                               அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)... அன்பார்ந்த சகோதரர்களே!       சில சகோதரர்கள் மற்றும் மாணவர்களின்  வேண்டுகோளுக்கிணங்க இந்த "அவ்காத் சலாத்" இடுக்கை இடப்பட்டுள்ளது. இதனை பயன்பெறுபவர்கள் இந்த அடியேனின் பாவமான்னிபிற்காக துஆ செய்யவும்.

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள்

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் . இதை உடனடியாக அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.  இதை உடனடியாக அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். 1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006 தொலைபேசி: 2829 5445 2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை – 14  தொலைபேசி: 94440 52530 3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை – 06 4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை – 06 5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத் பண்ட் பவுண்டேசன் 4 மூர்ஸ் ரோடு, சென்னை – 06 (ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்) 6. சுலைமான் ஆலிம் சாரிடபிள் டிரஸ்ட், ஜாவர் பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34 7. முஹம்மது சதக் அறக்கட்டளை 133 , நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 34 8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117 ஜெனெரல் பேட்டர்ஸ் சாலை ,சென்னை – 02 9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட், ஜபார்ஷா தெரு, திருச்சி. 10. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், 118 / பி வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை – 03 11. ...

இன்று சர்வதேச அரபு மொழி தினம்: அமெரிக்க பல்கலைக்கழகம் மற்றும் இணையங்களில் பயன்பாடு அதிகரிப்பு

வாஷிங்டன்,டிச.18:அமெரிக்காவின் பல்கலைக்கழகங்கள் இணையதள உலகம் ஆகியவற்றில் அரபுமொழி இவ்வாண்டு மிகச்சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. சமூக இணையதள நெட்வொர்க்கான ஃபேஸ் புக்கில் உலகின் முதல் 10 மொழிகளில் அரபு மொழி 20 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ஆனால், அரபு உலகத்தில் இணையதள பயனீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலிலும், காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை அடைய அரபு மொழியால் இயலவில்லை எனவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் அரபுமொழியின் மீதான விருப்பம் அதிகரித்துள்ளது. ரஷ்ய, லத்தீன் மொழிகளை இதில் அரபு மொழி முறியடித்துள்ளது. கல்வி கலாசாலைகளில் எட்டாவது இடத்தை அரபு மொழி பிடித்துள்ளது. இத்தகவல் மாடர்ன் லாங்குவேஜ் அசோசியேஷன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 1998 ஆம் ஆண்டில் அரபுமொழி படிப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 5500 ஆகும். ஆனால், 2002 ஆம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை 10,584 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 35000 ஆக உயர்ந்துள்ளது. 2154 அமெரிக்க கல்லூரிகளில் நடத்திய ஆய்வுகளில்தான் இவ்விபரத்தை கண்...

மக்கா மஸ்ஜித்:முஸ்லிம் சமுதாயத்திடம் ஆந்திர அரசு மன்னிப்புக் கேட்கும் - ஆந்திர மாநில முதல்வர்

ஹைதரபாத்,டிச.16:கடந்த 2007 ஆம் ஆண்டு ஹைதரபாத் மக்கா மஸ்ஜிதில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்களை போலீசார் வேண்டுமென்றே கொடுமைப்படுத்தியிருந்தால் அதற்காக முஸ்லிம் சமுதாயத்திடம் மன்னிப்புக்கேட்க ஆந்திர அரசு தயார் என அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி சட்டசபையில் அறிவித்தார். மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அக்பருத்தீன் உவைஸி எழுப்பிய கேள்விக்கும் பதிலளிக்கையில் முதல்வர் இதனை தெரிவித்தார். போலீஸாரால் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பொருளாதார உதவி வழங்கப்படும் எனவும் முதல்வர் உறுதி அளித்தார். நிரபராதிகளான முஸ்லிம்களை மட்டுமல்ல, எந்த நபர்களையும் கொடுமைப்படுத்தியிருந்தாலும் அரசுக்கு அதுக்குறித்து கவலை உண்டு. ஆனால் பணியின் ஒருபகுதியாக, சூழ்நிலையின் அடிப்படையில் போலீஸ் எவருக்கெதிராகவும் வழக்கு பதிவுச் செய்யும் என முதல்வர் தெரிவித்தார். குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்குகளில் போலீசார் கல்விக் கற்ற முஸ்லிம் இளைஞர்களை தவறாக சேர்த்துள்ளனர் என உவைஸி சுட்டிக்காட்டினார். சி.பி.ஐ விசாரணை நடத்தியிருக்காவிட்டால் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை நடத்தியது ...

சிறுபான்மை மொழிப் பாடங்களுக்குப் பாடநூல்கள் முதல்வர் கலைஞர் ஆணை…

படம்

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கொச்சைபடுத்தும் தி.மு.க. அரசு – தமுமுக கடும் கண்டனம்.

படம்
                                                                   தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை: தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக காவல்துறையினருக்கு அளிக்கப்படும் பயிற்சி செயல்பாட்டில் தீவிரவாதிகளை இஸ்லாமிய அடையாளங்களுடன் காட்டி தி.மு.க. அரசின் காவல்துறைக் கொச்சைப்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில், தீவிரவாதிகளை வேட்டையாடுவதாக நேற்று (09.12.10) போலீசார் நடத்திய பயிற்சி செயல்பாட்டில் போலி தீவிரவாதிகளைத் காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்த செய்தி பத்திரிகைகளில் படத்துடன் வெளிவந்துள்ளது. போலியாகப் போலீசார் உருவாக்கிய தீவிரவாதிகளுக்கு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட நபிவழியான தாடியை வேண்டுமென்றே ஒட...

WESTERN UNION

படம்
வெஸ்டர்ன் யு னியன் மணி டிரன்ஸ்பர்   உங்களின் அன்பி ற் க்குரியவர்களிடமிருந்து  சில நிமிடங்களில்* பணம் பெறுங்கள்.  தொடர்புக்கு  : 97896 88181,  97896 88181,  97896 88181